Wednesday 30 November 2016

பணி ஓய்வும் பாராட்டும்..!

தனது இலாக்கா பணியை துவங்கிய காலம் முதல் நமது நீலகிரி மாவட்ட சங்கத்திலும்,குன்னூர் கிளை சங்கத்திலும் பல்வேறு பொருப்புகளில் இருந்து சங்கப்பணியாற்றிய அருமை தோழர் S.பிரபாகரன் TT அவர்கள் இன்று இலாக்கா பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார் இலாக்கா பணியிலிருந்து ஓய்வு பெரும் இவர் மக்கள் பணியில் தொடரவும், இவரது  பணி ஓய்வு காலம் இனிதாய் அமையவும் நமது நீலகிரி மாவட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. பணி ஓய்வு பெற்ற தோழர் S.பிரபாகரன் TT அவர்களுக்கு குன்னூரில் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
அவற்றில் சில...






Saturday 26 November 2016

இப்பூவுலகை மிரட்டிக்கொண்டிருக்கும் ஆணவம் பிடித்த முதலாளித்துவ நாடான அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சோஷலிச சகாப்த நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ எனும் மாவீரன் நம்மை விட்டு மறைந்தார்..!

Image result for fidel castro

ஃபிடல் காஸ்ட்ரோ பிறப்பு:

கியூபாவின் பிரான் அருகில் ஒரு கரும்பு தோட்டத்தில், 1926-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் நாள் ஏஞ்சல் காஸ்ட்ரோ - லினா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் அல்ஜாந்திரோ காஸ்ட்ரோ. இவரது தந்தை ஏஞ்சல் காஸ்ட்ரோ பெரும் பண்ணையார். அதனால் சுகபோக வாழ்வில் ஃபிடலுக்கு குறைவேதும் இல்லை. இவர் இளைஞனாக இருந்தபோது, அமெரிக்கர்களின் ஏகாதிபத்தியத்தில் கியூபா சிக்குண்டு கிடப்பதைக் கண்டு மனம் வருந்தினார்.
நீங்கள் ஒரு குற்றவாளியைப் பிடித்து விசாரணை செய்வதற்கு முன், உங்களால் குற்றவாளியாக கருதப்படும் அவன் எத்தனை காலம் வேலை இல்லாமல் இருந்தான் எனக் கேட்டதுண்டா? 'உனக்கு எத்தனைக் குழந்தைகள்? வாரத்தில் எத்தனை நாட்கள் உனது குடும்பத்தினர் உணவு உண்பீர்கள்? எத்தனை நாட்கள் பட்டினி கிடந்தீர்கள்?' என்றெல்லாம் அவனிடம் கேட்டதுண்டா? அவனின் சூழ்நிலை பற்றியாவது விசாரித்ததுண்டா? இவைகளைப் பற்றி எதுவும் அறியாமல், அவனைச் சிறையில் தள்ளி விடுகிறீர்கள். ஆனால், கோடிக்கணக்கான ரூபாய்களை கொள்ளை அடிப்பவர்களையும், மக்களின் உரிமைகளைச் சுரண்டுபவர்களையும் ஒரு நாள்கூட சிறையில் தள்ள மாட்டீர்கள். இதுதான் உங்கள் சட்டம்" - 1953 ஆம் ஆண்டு மோன் காடா தாக்குதலில் 76 நாட்கள் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டு பின் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஃபிடல் காஸ்ட்ரோ நீதிபதியைப் பார்த்து இப்படிக் கேட்கிறார்.
ஃபிடலின் புகழ்மிக்க பொன்மொழிகள்:
*இறந்த காலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான்புரட்சி!
*கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்!
*நீங்கள் என்னைக் தண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில், வரலாறு எனக்கு நீதி வழங்கும்!
*வர்கள் சோஷலிசத்தின் தோல்வி பற்றி பேசுகின்றனர். ஆனால், ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் எங்கே முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது?
இப்போதும் கியூபாவில் ஒரு வழக்கம் உண்டு. அதிகாலையில் வகுப்பறைகளுக்குச் செல்லும் முன், அத்தனைக் குழந்தைகளும் ஒருமித்தக் குரலில் முழங்குகிற வாசகம் என்ன தெரியுமா
‘‘ எங்களது முன்னோர்கள் கம்யூனிஸ்ட்களாக இருந்தனர். நாங்கள் 'சே'-வைப்போல ஃபிடல் காஸ்ட்ரோ-வைப் போல இருப்போம்!” என்பதே.
மக்களின் தலைவர், சோசலிசத்தின் தந்தை, புரட்சியின் நாயகன் ஃபிடலை இழந்து தவிக்கும் கியூபா மக்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும், நமது நீலகிரி மாவட்ட சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது, ஆம்...அந்த மாபெரும் தலைவரின் வழிகாட்டல் காற்றில் கலந்து வரும் காலங்களில் மக்களை வழிநடத்திக்கொண்டே இருக்கும்!
நீலகிரி மாவட்ட சங்கம்.


Friday 25 November 2016

மத்திய சங்கங்ககளின் அறைகூவலான தர்ணாபோராட்டத்தை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் நீலகிரி மாவட்ட BSNL ஊழியர் சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துக்கள்...
அவற்றில் சில...





Wednesday 16 November 2016

BSNL ஊழியர்களின் செயல் திறனுக்கேற்ப ஊதிய உயர்வாம் சொல்கிறார் நமது BSNLநிறுவனத்தின் CMD அவர்கள்
The Economic Times (CLICK)
நமது BSNL நிறுவனத்தை அழிக்க நினைக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து தர்ணா மற்றும் ஒரு நாள் வேலை நிறுத்தம்..!

நமது BSNL நிறுவனத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து இன்று தலை நகர் டெல்லியில் கூடி மத்தியில் ஆளும் BJP அரசாங்கத்தின் தவறான நமது நிறுவனத்தை சீர்குலைக்கும் போக்கான துணை டவர் நிறுவனம் அமைப்போம் எனும் போக்கிற்கு எதிராக வருகிற 25/11/2016 அன்று சக்தி மிகு ஒரு நாள் தர்ணா போராட்டம் நடத்துவது எனவும் அரசு தனது தவறான போக்கை கைவிடாத பட்சத்தில் 15/12/2016 அன்று ஒரு நாள் நாடு தழுவிய மாபெரும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கும் அரை கூவல் விடுத்துள்ளன.மாநில மற்றும் மாவட்ட சங்கங்கள் அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து    மாபெரும் சக்தி மிகு போராட்டமாக இப்போராட்டங்களை நடத்திடுமாறு மத்திய சங்கங்களால்  அறைகூவல் விடப்பட்டுள்ளது.

நாங்கள் கட்டி காத்த எங்களது, இந்திய நாட்டின் மக்களது நிறுவனமான BSNL நிறுவனத்தை யாரும் கூறுபோட அனுமதியோம் தயாராவோம் தோழர்களே போராட்ட கலத்திற்கு கோடிக்கால் பூதமாக!
நீலகிரி மாவட்ட சங்கம் 

Monday 14 November 2016

என் அதிரடி நடவடிக்கைகள் நான் விற்ற டீ போல 'ஸ்டிராங்'காதான் இருக்கும்: மோடி காரசாரம்

Image result for modi

நான் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் எல்லாம் என் இளமை காலத்தில் நான் விற்ற தேனீர் போல ஸ்டிராங்காதான் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் காஸிப்பூரில் இன்று நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றியதாவது, நான் சிறு வயதில் ரயில் நிலையத்தில் தேனீர் விற்பனை செய்த போது, ஏழை, எளிய மக்கள் என்னிடம் தேனீரை சற்று ஸ்டிராங்கா போட்டுக் கொடு என்பார்கள். இப்போது நான் எடுக்கும் நடவடிக்கைகளும் அதுபோலத்தான் இருக்கும் என்றார்.
மேலும், கருப்புப் பணம் பதுக்கப்பட்டதால் ஏழை மக்கள் பட்ட கஷ்டமும் எனக்குத் தெரியும், தற்போது பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் நீங்கள் படும் கஷ்டமும் எனக்குத் தெரியும்.

ரூ.2.50 லட்சம் அளவுக்கு டெபாசிட் செய்யும் பெண்களை வருமான வரித்துறை கேள்வி கேட்காது. ஆனால், 2.50 கோடி அளவுக்கு டெபாசிட் செய்தவர்களைத் தான் கேள்வி கேட்போம். உங்களைக் காப்பதற்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன். உங்கள் பணம் பாதுகாப்பாகத்தான் உள்ளது. ஏழைகள் நிம்மதியாக உறங்குகிறார்கள். கருப்புப் பணத்தை பதுக்கியவர்கள்தான் உறக்கம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று கூறினார்.
நமது பிரதமரின் ஸ்ட்ராங்கான அதிரடிகள் யாரை குறிவைத்து பதுக்கியவர்களையா? அல்லது ஏழை எளிய மக்களையா?ஏழைகள் நிம்மதியாக உறங்குகிறார்கள் என்றால் அது உறக்கமா அல்லது பசி மயக்கமா?சிந்திப்பாரா தேனீர் விற்றவர்... 
நாளை முதல் கடைகளை அடைக்க கேரளா வியாபாரிகள் முடிவு...
வர்த்தகம் பாதிக்கப்பட்டதால் கேரளாவில் நாளை முதல் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைக்க வியாபாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி  அறிவித்ததை தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக நாடு முழுவதும் மக்கள் திண்டாடி வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாததால் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

கடைகளிலும் மக்களுக்கு தேவையான சில்லரைகளை கொடுக்க முடியவில்லை. இதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டதால் கேரளாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைக்க வியாபாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து கேரள வியாபாரிகள் சங்க தலைவர் ஒருவர் கூறுகையில்சில்லரை தட்டுப்பாட்டால் மாநிலம் முழுவதும் வர்த்தகம் கடுமையாக பாதிப்பட்டதால் கடைகளை அடைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அரசு தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவில்லைஎன்றார்.

மேலும், கணக்கில் வராத பணம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என கடைகளின் உரிமையாளர்களிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் மிரட்டல் விடுத்ததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்