Monday 18 December 2017

13.12.2017 அன்று ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது. BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, BTEU, AIGETOA, SEWA BSNL, BSNL MS BSNL OA மற்றும் BSNL ATM ஆகிய சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் மிக பிரமாண்டமாக நடைபெற்றதற்கு அதில் முழு மனதுடன் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களை அந்தக் கூட்டம் தெரிவித்தது. இந்த வேலை நிறுத்தம் வெற்றிபெற உழைத்திட்ட அனைத்து மட்ட தலைவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது. மேலும் தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு கூட அழைக்காத BSNL நிர்வாகத்திற்கும், DOTஅதிகாரிகளுக்கும் இந்தக் கூட்டம் கண்டனத்தை தெரிவித்தது. இதில் பங்கேற்ற அனைத்து தலைவர்களும், போராட்டத்தை தீவிரப்படுத்த உறுதியான கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் முன் வைத்துள்ளனர். அடுத்த கட்ட போராட்ட திட்டத்தை வடித்தெடுக்க 08.01.2018 அன்று அடுத்த கூட்டத்தை கூட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
01.01.2017 முதல் ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும் மற்றும் BSNL நிறுவனத்தை அழிக்கும் துணை டவர் நிறுவனம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக நடைபெற்ற 2017 டிசம்பர் 12 மற்றும் 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தமிழ் மாநில சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வெற்றிக்காக உழைத்திட்ட அனைத்து சங்கங்களின் அகில இந்திய, மாநில, மாவட்ட மற்றும் கிளை தலைவர்களையும் முன்னணி தோழர்களையும் மனதார வாழ்த்துகிறோம். நமது போராட்டம் முழு வெற்றி கிட்டும் வரை தொடரும். நமது போராட்ட வாளின் கூர் முனையை மேலும் தீட்டி வைப்போம். வாழ்த்துக்கள்.

Friday 15 December 2017

நடந்து முடிந்த இரெண்டு நாள்  வேலை  நிறுத்த போர்ராட்டம் நீலகிரி மாவட்டத்தில் 97.67 % தோழர்ககள்  கலந்தூக் கொண்டனர்  என்பதை
 மகிழ்ச்சியுடன் தெருவித்துக்கொள்கின்றோம்  
புரட்சிவாழ்த்துக்கள் .




                                                  நீலகிரி மாவட்டம்  

Friday 22 September 2017

                                                        BSNLEU NILGIRIS

    மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் தொடர்ந்து மக்கள் விரோத கொள்கைகள் அமலாக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டில் வளர்ச்சிக்கு பதிலாக பல்வேறு முக்கிய துறைகள் வீழ்ச்சியையே சந்தித்து வருகின்றன. இந்நிலையில் பிரான்சை தலைமையிடலாக கொண்டும் 34 நாடுகளை உறுப்பு நாடுகளாக கொண்டும் இயங்கி வரும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிகான அமைப்பு (ஒஇசிடி ) இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் இந்தியா தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருவதோடு, வேலையின்மையும் கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 197 சதவீதம் வரையில் உயர்ந்தது. இதன் காரணமாக விலைவாசி உயர்ந்து மக்களிடம் இருந்த பணம் பறிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 1.09 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் நடப்பு ஆண்டில் 3.24 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் 31 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகின்றனர் என ஒஇசிடியின் பொருளாதார ஆய்வறிக்கை 2017 தெரிவிக்கிறது.
இளைஞர்கள் இந்தியாவில் 15-29 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களில் படிப்பறிவு மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்போரின் அளவு மட்டும் 30.83 சதவீதமாக இருக்கிறது. உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அப்படிப்பட்ட இளைஞர் சக்திக்கு எவ்வித வேலைவாய்ப்பு உத்தரவாத படுத்தாத திட்டங்கள்தான் பெருமளவில் இந்த காலத்தில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இளைஞர்களின் வேலையின்மை விகிதமும் அதிகரித்து வருகிறது.  இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதி 15-29 வயது வரம்புக்குள் இருக்கும் பட்சத்தில் 30.83 சதவீதம் என்பது மிகவும் அதிகமானது. கிட்டதட்ட இந்தியாவில் 31 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் மீதான விலை உயர்வின் அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்களுக்கு வேலைவாய்ப்புப் பற்றாக்குறை செய்தி பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் புதிய இந்தியா பிறக்கிறது, நாட்டு மக்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும், நாட்டின் பொருளாதாரம் உயரும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தொடர்ந்து நம்பிக்கை வார்த்தைகளை மத்திய அரசு விசும் நிலையில், உண்மை தலைகீழாக இருக்கிறது எனப்து இந்த ஆய்வறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது சந்தையில் நிலவும் பணவீக்கம், வேலைவாய்ப்பு பற்றாக்குறையால் மக்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
மோடியின் அறிவிப்புகள் பிரதமர் மோடி நாட்டில் சுமார் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறினார், தற்போதைய நிலையைப் ஆய்வுக்க உட்படுத்துகையில் இருக்கும் வேலைகளும் பறிக்கப்படாமல் இருப்பதே பெரிய விஷயமாக மாறியிருக்கிறது.
பிற நாடுகள் 15-29 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களில் படிப்பறிவு மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்போரின் அளவு இந்தியாவில் 30.83 சதவீதம் இருக்கும் நிலையில், தென் ஆப்பிரிக்காவில் 36.65 சதவீதமாகவும், இந்தோனேசியாவில் 23.24 சதவீதமாகவும் உள்ளது. இதனைத் தொடர்ந்து கொலம்பியாவில் 20.62 சதவீதமாகவும், அர்ஜென்டீனாவில் 20.30 சதவீதமாக உள்ளது.
இந்தத் திடீர் உயர்வுக்கு உணவு பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசலின் விலை உயர்வு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. மொத்த பணவீக்கத்தில் மிகப்பெரிய பங்கு கொண்ட உணவு பொருட்களின் விலை உயர்வு சாமானியர்களைப் பாதித்தது மட்டுமல்லாமல் பணவீக்கத்தையும் உயர்த்தியது.
அதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் பணவீக்கம் 4.37 சதவீதத்தில் இருந்து 9.99 சதவீதமாக உயர்ந்து மொத்த விலை பணவீக்கத்தை 197 சதவீத உயர்விற்குக் கொண்டு சென்றது.
கச்சா எண்ணெய் புயல் காரணமாக அமெரிக்காவில் சுத்திகரிப்புப் பணிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பல இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 3 வருட உயர்வை அடைந்து, இதற்கு அடிப்படை காரணம் மத்திய அரசு பெட்ரோல் மீது விதிக்கும் கலால் வரியும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. 2017 துவக்கம் முதல் தற்போது வரை மத்திய அரசு டீசல் மீதான கலால் வரியை 12 முறை உயர்த்தியிருக்கிறது. இது 2016 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது மட்டும் 54 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இதற்கிடையில் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 27 சதவகித்தில் இருந்து 34 சதவிகிதம் வரை விதித்து வசூலித்து வருகின்றன. இதன் காரணமாக பெட்ரேல் டீசலின் விலை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு அனைத்து உணவு பொருட்களின் விலையையும் உயர்த்தியிருக்கிறது. இதன் காரணமாக ஒட்டு மொத்த மக்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday 21 September 2017

                               BSNLEU  NILGIRIS 


மத்திய BJP மோடி அரசாங்கம்  கார்ப்பரேட்களுக்கு 
சலுகைகள்,உதவிகள் செய்துவருவது நம் அனைவருக்கும்
தெரியம். ஆனால் தற்போது செய்திருப்பது அப்பட்டமாக‌
தெரிகிறது.
தபால் அலுவலகஙகளில் RELIANCE JIO சிம் விற்பதற்கு
உடன்பாடு போடப்பட்டு. உத்திரபபிரதேச மாநிலம்
லக்னோவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அரசு நிறுவனமான BSNL  சிம்மை விற்பதற்கு இதுவரை
முயற்சி செய்யவில்லை.கார்ப்பரேட் சிம்மை விற்பதற்கு
அனுமதி கொடுத்துள்ளதை நாம் வெட்கப்பட வேண்டிய விஷ்யம்

Wednesday 20 September 2017


தோழர்களே,
நடக்கவிருக்கும் நமது ஒப்பந்த தொழிலாளர்களின் (TNTCWU) குன்னூர் கிளை மாநாட்டிற்கும் மற்றும் கருத்தரங்கிற்கும் அனைத்து தோழர்களும் தங்களது குடும்பத்தாருடன் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு  கேட்டு கொள்கிறேன்.

                                              தோழமை வாழ்த்துக்களுடன்,
                                                          நீலகிரி மாவட்ட சங்கங்கள் 

Sunday 30 April 2017

இன்று காலை குன்னூர் கிளைகளின் சார்பில் நடை பெற்ற மே தின நிகழ்வுகளில் சில:-








உழைக்கும்  மக்கள் அனைவருக்கும் நீலகிரி மாவட்ட சங்கத்தின் இனிய மே தின நல் வாழ்த்துக்கள் 

Image result for may day 2017

Thursday 13 April 2017

சமூகப்பணிகள், தீண்டாமைக்கு எதிரானபோராட்டங்கள், இந்திய ரிசர்வ்வங்கி உருவாக்கத்தில் பங்கு, இந்திய அரசியல் அமைப்பு வரைவுக்குழு தலைவர், மற்றும் பாரத் ரத்னா பாபா சாகேப் என்று அழைக்கப்படும் 
முனைவர்  பீம்ராவ் ராம்ஜி  அம்பேத்காரின் பிறந்தநாள். 14/04/1891.

Image result for dr ambedkar images
உழைக்கும் மக்கள் அனைவருக்கும் நீலகிரி மாவட்ட சங்கத்தின் 
"இனிய தமிழ்  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2017"

Image result for tamil new year 2017

Friday 7 April 2017

''BSNL நிறுவனத்தில் மீண்டும் ஒரு சாதனை''

கடந்த 2017 மார்ச்  மாதம் நமது ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் முயற்சியால் நமது BSNL நிறுவனம் 29,52,251 (29.5) லட்சம் புதிய செல்பேசி சந்தாதாரர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இதில் குஜராத் மாநிலம் முதலிடத்தில் 2,82,982 செல்பேசி சந்தாதாரர்களையும், உத்தர பிரதேசம் (கிழக்கு) 2,54,542 செல்பேசி சந்தாதாரர்களை பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளது நிறுவனம் காக்கும் முயற்சியில் அயராது பாடுபடும் அனைவருக்கும் நமது மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.


இன்று 07/04/2017 காலை 10:00 மணி குன்னூர் வாடிக்கையாளர் சேவை மையம்முன்  நேற்று பெய்த மழையினால் கழிவு நீருடன் தேங்கி நிற்கும் மழைநீர்! வாடிக்கையாளர்கள் சேவை மையத்திற்க்குள் நுழைய முடியாநிலை! கவனிக்குமா நமது BSNL நிறுவனம்?



Thursday 6 April 2017

பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் நமது BSNL நிறுவனம் MOU ஒப்பந்தம் செய்துள்ளது.

Wednesday 5 April 2017

ஒடிசா மாநிலத்தில் மைக்ரோ வேவ் கூடுதல் பொது மேலாளர் G.C Bidika வை ஒப்பந்ததாரரிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றபோது மத்திய புலனாய்வு துறை (CBI) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்நிகழ்வு ஊழலில் திளைக்கும் அனைவருக்கும் எச்சரிக்கையாகட்டும்.

நமது சம்பள மாற்றத்திற்கான கோரிக்கை அட்டை அணிந்து,கவன ஈர்ப்பு போராட்டம் நமது நிறுவனத்தை நிர்வாகிக்கும் நிர்வாகிகளின் கவனத்தை ஈர்த்திருக்குமா? இல்லையெனில் அடுத்து எரிமலையென வெடித்து கிளம்பும் போராட்டம் தேவைப்படுமா?எந்த போராட்டத்திற்கும் தயாராய் நிற்கும் BSNL நிறுவனத்தின் ஊழியர்கள்...  

குன்னூர் அவுட்டோர் கிளையில் நடந்த போராட்டத்தின் சில காட்சிகள்...




கூடலூர் கிளையில் நடந்த போராட்டத்தின் சில காட்சிகள்...


 போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும்
     BSNLEU நீலகிரி மாவட்ட சங்கத்தின் புரட்சி வாழ்த்துக்கள்...