Tuesday, 28 June 2016
BSNLEU & TNTCWU உதகை கிளை மாநாடு
25.06.2016 அன்று உதகை கிளையின் BSNLEU & TNTCWU இணைந்த கிளை மாநாடு தோழர்.R.சதாசிவம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இக்கிளை மாநாட்டில் தோழர்.V.முரளிகிருஷ்ணன், மாவட்டச் செயலர் BSNLEU அவர்களும், தோழர்.நாகேஸ்வரன் LIC-யின் கோவை மண்டல செயலர் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.
இம் மாநாட்டில் கீழ்கண்ட தோழர்கள் ஏக மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்...
BSNLEU
தலைவர் :தோழர்.S.அந்தோணிராஜ், TM
செயலர் : தோழர்.R.பசுபதி, TM
பொருளாளர் : தோழர்.L.கிறிஸ்டோபர், TM
TNTCWU
தலைவர் :தோழர்.சாதிக் க்ஷெரிஃப், TM
செயலர் :தோழர்.பிரதிஷ்குமார், CL
பொருளாளர் :தோழர்.ஜான்சி
தோழர்களின் பணிசிறக்க மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Saturday, 18 June 2016
05.07.2016 கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்படடம்
அன்பார்ந்த தோழர்களே,
ஊழியர் பிரசனைகள் மீது BSNL இயக்குனர் குழுவின் எதிர்மறை அணுகுமுறையை கண்டித்தது BSNL ஊழியர் சங்கமும், UNITED FORUM-த்தில் உள்ள சங்கங்களை கலந்தாலோசித்த பின் நாடு தழுவிய அளவில் 05.07.2016 அன்று கருப்பு அட்டையணிந்து ஆர்ப்பாட்டம் நடத்திட மத்திய சங்கத்தின் அறைகூவலை ஏற்று நமது மாவட்டத்தில் SNATTA மற்றும் BSNLMS சங்கங்களோடு இணைந்து அனைத்து கிளைகளிலும் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்கிட வேண்டுமென மாவட்ட சங்கம் கேட்டுக்கொள்கிறது.
Subscribe to:
Posts (Atom)