Tuesday 23 May 2023

 DoTயில் தேர்வு செய்யப்பட்டு, 01.10.2000க்கு முன் பயிற்சிக்கு அனுப்பப்பட்டவர்களுக்கு, ஜனாதிபத்திய உத்தரவு வழங்க வேண்டும் என JOINT FORUM, தொலைதொடர்பு துறையின் செயலருக்கு கடிதம்.

DoTயில் தேர்வு செய்யப்பட்டு, BSNL ஆவதற்கு முன் பயிற்சிக்கு அனுப்பப்பட்டு, 01.10.2000க்கு பின் பணியமர்த்த பட்ட ஊழியர்களுக்கு, ஜனாதிபத்திய உத்தரவு வழங்க வேண்டும் என, தொலைதொடர்பு துறையின் செயலருக்கு கடிதம் எழுத வேண்டும் என 15.05.2023 அன்று காணொளி காட்சி மூலம் நடைபெற்ற JOINT FORUM OF NON EXECUTIVE UNIONS OF BSNL கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதில் மூன்று மத்திய நிர்வாக தீர்ப்பாயங்களும், இரண்டு உயர் நீதி மன்றங்களும், ஊழியர்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. இந்த பிரச்சனைகளை விவரித்து தொலை தொடர்பு துறையின் செயலருக்கு JOINT FORUM கடிதம் எழுதியுள்ளது.

 மருத்துவ குழு காப்பீட்டு திட்டத்திற்கான பிரீமியம் தொகையை இரண்டு தவணைகளில் பிடித்தம் செய்ய கார்ப்பரேட் அலுவலகம், கடிதம் வெளியிட்டுள்ளது

விருப்பப்படும் ஊழியர்களுக்கு குழு மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான பிரீமியம் தொகையினை, இரண்டு தவணைகளில் பிடித்தம் செய்யலாம் என கார்ப்பரேட் அலுவலகம், 19.05.2023 அன்று கடிதம் வெளியிட்டுள்ளது.

Monday 8 May 2023

 BSNL ஊழியர் சங்கத்தின் போபால் மத்திய செயற்குழு, வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

போபாலில் நடைபெற்ற, BSNL ஊழியர் சங்கத்தின் இரண்டு நாள் மத்திய செயற்குழு, 07.05.2023 அன்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது. ஒட்டு மொத்தமாக 44 தோழர்கள் விவாதங்களில் பங்கேற்றனர். அதன் அடிப்படையில், முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஊதிய மாற்றத்தில் ஏற்பட்டுள்ள அதீத கால தாமதம், BSNLன் 4G மற்றும் 5G சேவைகளை துவக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் ஒவ்வொரு மாதமும், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், BSNLஐ விட்டு விலகுவது உள்ளிட்ட பிரச்சனைகளின் மீது தனது ஆழ்ந்த கவலையை, இந்தக் கூட்டம் பதிவு செய்தது. BSNL மற்றும் அதன் ஊழியர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க, JOINT FORUMத்தில் அக்கறையுடன் விவாதித்து, சக்திவாய்ந்த போராட்டங்களை நடத்த வேண்டும் என மத்திய தலைமையகத்திற்கு, இந்தக் கூட்டம் வழிகாட்டியது. மேலும், IDA நிலுவை தொகை பட்டுவாடா செய்யப்படுவதற்கு தேவையான, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த மத்திய செயற்குழு, மத்திய தலைமையகத்தைக் கேட்டுக் கொண்டது. கீழ்கண்ட பிரச்சனைகளின் மீதும், ஆழமான விவாதங்கள் நடைபெற்றன:-

1) அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்திற்கான நன்கொடையை, உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
2) உரிய கால கட்டத்தில் மாநில மாநாடுகள் நடைபெற வேண்டும்.
3) பணியிடங்களில், பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
4) அனைத்து மாநிலங்களிலும், BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும்.
5) மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில், BSNLEU, AIBDPA மற்றும் BSNLCCWF (TNTCWU) சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக்களின் செயல்பாட்டை வலுப்படுத்த வேண்டும்.
6) BSNL CCWFஐ புத்தாக்கம் செய்வது.
7) மத்திய சங்கத்தின் WHATSAPP செய்திகளை ஒவ்வொரு ஊழியர்களுக்கும் கொண்டு செல்வது.
8) அனைத்து உறுப்பினர்களின் மொபைல் தொலைபேசியிலும், TWITTER கணக்கு துவங்குவது.
9) BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தை காணொளி காட்சி மூலம் நடத்துவது.

 போபால் மத்திய செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

போபாலில் நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழுவில், விரிவான விவாதங்களுக்கு பின், கீழ்கண்ட பிரச்சனைகளின் மீது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

1) ஊதிய மாற்றம் தீர்வு காணப்பட வேண்டும்.
2) 4G மற்றும் 5G சேவைகளை BSNL துவக்க வேண்டும்.
3) MTNL மற்றும் BSNL இணைப்பு தொடர்பாக.
4) NFPE சம்மேளனம் மற்றும் AIPEU Group ‘C’சங்கம் ஆகியவற்றின் அங்கீகாரம் ரத்து செய்ததற்கு எதிராக.
5) மனித வள சீரமைப்பில் நிர்ணயிக்கப்பட்ட NORMSகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
6) பஞ்சாப் மாநிலத்தில், JTO இலாகா தேர்வு முடிவுகள் வெளியிடப்படாதது தொடர்பாக.

 


மாற்றலில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகையை மறுப்பதற்கு எதிராக, 11.05.2023 அன்று ஆர்ப்பட்டம் நடத்துவதற்கான அறிவிப்பை, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு வழங்கியது.

மாற்றலில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகை மறுக்கப்படுவதற்கு எதிராக, 11.05.2023 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த, BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையம், ஏற்கனவே அறைகூவல் விடுத்திருந்தது.

BSNL ஊழியர் சங்கத்திற்கு 33 மாநில சங்கங்கள் உள்ளன. கார்ப்பரேட் அலுவலக உத்தரவின் படி, ஒவ்வொரு மாநிலத்திலும், 3 நிர்வாகிகள், மாற்றலில் இருந்து விலக்கு என்கிற வசதியை பெற தகுதியானவர்கள். ஆனால், இந்த 33 மாநிலங்களிலும், ஒரு நிர்வாகி கூட இந்த சலுகையை அனுபவிக்கவில்லை.

அதே போல, நாடு முழுவதும், BSNL ஊழியர் சங்கத்திற்கு 372 மாவட்ட சங்கங்கள் உள்ளன. கார்ப்பரேட் அலுவலக உத்தரவின் படி, ஒவ்வொரு மாவட்டத்திலும், 3 நிர்வாகிகளுக்கு இந்த மாற்றலில் இருந்து விலக்கு அளிக்கும், சலுகையை பயன்படுத்த முடியும். ஆனால், வதோதரா, ஸ்ரீகாகுளம் மற்றும் கடப்பா ஆகிய மூன்று மாவட்ட செயலாளர்கள் மட்டும், இந்த சலுகையை பயன்படுத்தி உள்ளனர்.

தற்போது, இந்த வசதியை முழுமையாக நீக்குவதற்கு, BSNL நிர்வாகம் விரும்புகிறது போலும். குஜராத் மாநிலம், வதோதரா மாவட்ட செயலாளர் தோழர் ஆனந்த் நாராயண் சிங் அவர்களுக்கு போடப்பட்டுள்ள, மாற்றல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி, 11.05.2023 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அறிவிப்பை, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு இன்று வழங்கியுள்ளது. இந்த பிரச்சனை, சுமுகமாக தீர்வு காணப்படவில்லை எனில், BSNL ஊழியர் சங்கம், நிச்சயமாக தனது போராட்டத்தை தீவிரப்படுத்தும்.

 

Monday 18 December 2017

13.12.2017 அன்று ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது. BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, BTEU, AIGETOA, SEWA BSNL, BSNL MS BSNL OA மற்றும் BSNL ATM ஆகிய சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் மிக பிரமாண்டமாக நடைபெற்றதற்கு அதில் முழு மனதுடன் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களை அந்தக் கூட்டம் தெரிவித்தது. இந்த வேலை நிறுத்தம் வெற்றிபெற உழைத்திட்ட அனைத்து மட்ட தலைவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது. மேலும் தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு கூட அழைக்காத BSNL நிர்வாகத்திற்கும், DOTஅதிகாரிகளுக்கும் இந்தக் கூட்டம் கண்டனத்தை தெரிவித்தது. இதில் பங்கேற்ற அனைத்து தலைவர்களும், போராட்டத்தை தீவிரப்படுத்த உறுதியான கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் முன் வைத்துள்ளனர். அடுத்த கட்ட போராட்ட திட்டத்தை வடித்தெடுக்க 08.01.2018 அன்று அடுத்த கூட்டத்தை கூட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
01.01.2017 முதல் ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும் மற்றும் BSNL நிறுவனத்தை அழிக்கும் துணை டவர் நிறுவனம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக நடைபெற்ற 2017 டிசம்பர் 12 மற்றும் 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தமிழ் மாநில சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வெற்றிக்காக உழைத்திட்ட அனைத்து சங்கங்களின் அகில இந்திய, மாநில, மாவட்ட மற்றும் கிளை தலைவர்களையும் முன்னணி தோழர்களையும் மனதார வாழ்த்துகிறோம். நமது போராட்டம் முழு வெற்றி கிட்டும் வரை தொடரும். நமது போராட்ட வாளின் கூர் முனையை மேலும் தீட்டி வைப்போம். வாழ்த்துக்கள்.