Friday, 28 October 2016

உழைக்கும் மக்கள் அனைவருக்கும் BSNLEU நீலகிரி மாவட்ட சங்கத்தின் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Image result for deepavali 2016

Thursday, 27 October 2016

துணை  டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து நமது BSNL FORUM விடுத்த அழைப்பிற்கிணங்க இன்று காலை குன்னூர் சிம்ஸ் பூங்கா வாடிக்கையாளர் சேவை மையம் முன்பும் மதியம் குன்னூர் தொலை பேசி நிலையம் முன்பும் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தின் சில காட்சிகள்...


Tuesday, 25 October 2016

மலைகளின் மேல் மாலை நேரத்து தர்ணா 
நமது மாநில சங்கத்தின் அறைகூவலான தர்ணா போராட்டத்தை நமது குன்னுர் தொலை பேசி நிலையம் முன் மாலை 3மணி முதல் 6மணி வரை  நமது BSNLEU மற்றும் TNTCWU சங்கங்கள் இணைந்து வெற்றிகரமாகநடத்தின 
அவற்றில் சிலகாட்சிகள்...


Monday, 24 October 2016

CGM அலுவலகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மாநில நிர்வாகம் பணிக்கு எடுக்க கோரி நாளை 25/10/2016 மாவட்ட தலை நகரங்களில் மாலை நேர தர்ணா மாநில சங்கத்தின் அறைகூவல் வெற்றிகரமாக்க வாருங்கள் தோழர்களே GM அலுவலகம் நோக்கி. 

Saturday, 22 October 2016

மத்தய சங்க செய்திகள்... 
ரூபாய் 3050 கோடி அபராதம் 

நமது பாரத பிரதமர் அவர்கள் உட்பட ஒட்டுமொத்த அரசு எந்திரமும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ  நிறுவனத்திற்கு ஆதரவாக செயல் படுவதை நிரூபித்தது தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நமது நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களான ஏர்டெல்,ஓடா போன் மற்றும் ஐடியா நிறுவனங்கள்   முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ  நிறுவனத்திற்கு தேவையான அளவிற்கு உட்புற இணைப்புகள் வழங்காததால் அதற்க்கு அபராதமாக ரூபாய் 3050 கோடி ரூபாய் செலுத்தவேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் மேற்காண் தொலை தொடர்பு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கூறியுள்ளது. கடந்த காலங்களில் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் விதிமீறலால் அரசு துறை நிறுவனமான BSNL நிறுவனம் மாபெரும் நஷடத்தை சந்தித்த போது அமைதிகாத்த  தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்காக ஆர்ப்பரிப்பது நமக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.

Friday, 21 October 2016

மேலும் தாமதம் ஆகும்  2014-2015ம் 
ஆண்டிற்கான  PLI
07/10/2016ம் தேதியன்று 2014-2015ம் ஆண்டிற்கான  PLI உத்தரவு வெளியிடப்பட்டும் இதுவரை பட்டுவாடா செய்யப்படவில்லை இதை மேலும் காலதாமதம் படுத்தும் விதமாக 21/10/2016ல் நமது இயக்குனர் (HR) அவர்களின் வேண்டுகோளை ஏற்கும் ஊழியர்கள் தங்களது விருப்பத்தை வரும் 24/10/2012ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரிகளை சந்தித்து கடிதம் வழங்கும் படி நமது G.M. (Restg./WS&l) அனைத்து அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார் ஆகவே  அதன் பின் தான் 2014-2015ம் ஆண்டிற்கான  PLI வழங்கப்படும்.   


Wednesday, 19 October 2016

மத்திய சங்க செய்திகள் ...

2014-2015ம் ஆண்டிற்கான PLI குறித்த கார்ப்ரேட் உத்தரவு வெளியாகி 
10 நாட்களுக்கு மேலாகியும் அதற்கான நிதி இதுவரை மாநிலங்களுக்கு வழங்கப்படவில்லை இதுகுறித்து நமது பொதுச்செயலர் GM(T&BFCI) அவர்களை அணுகியபோது நிதி வழங்குவது குறித்து அவரால் சரிவர கூறமுடியாத காரணத்தால் இவ்விஷயத்தில் மேலும் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதால் நமது CMD BSNL  அவர்களை  உடனடியாக தலையிட்டு மாநிலங்களுக்கு நிதி வழங்க தக்க நடவடிக்கை எடுத்து காலதாமதத்தை தவிர்க்கும் படிக்கும்  நமது பொதுச்செயலர்  கடிதம் எழுதியுள்ளார்.

நமது NE ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூபாய் 200/-க்கான SIMகார்டில் ஊழியர்கள் நமது  சேவையை மேம்படுத்த வசதியாக நமது சங்கம் எடுத்த முயற்சியின் விளைவால் ரூபாய் 200/-ல் ரூபாய் 50/-க்கு பிற செல் பேசி நிறுவனங்களுக்கும் அழைத்துக்கொள்ளும் சலுகை இந்தமாதம் நிறுத்தப்பட்டது இது தவறு என  நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியது ஆனால் கார்ப்ரேட் நிர்வாகம் இது குறித்து மாநில நிர்வாகங்களிடம் தேவையற்ற தகவல்களை கேட்டு காலதாமதம் செய்து வருகிறது இது குறித்து நமது பொது செயலரும்,உதவி பொதுச்செயலாரும் நமது இயக்குனர் மனித வளம் அவர்களை சந்தித்து இச்சலுகை தொடர வற்புறுத்தினர் அவரும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

துணை டவர் நிறுவனம் அமைப்பதை எதிர்த்து நாம் 26/10/2016 அன்று நடக்கவிருந்த முதற்கட்ட போராட்டமான ஆர்ப்பாட்டம் 27/10/2016 அன்று ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது அனைத்து தோழர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்து BSNLநிறுவனம்  காக்கும் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்.
நீலகிரிமாவட்ட சங்கம். 

Tuesday, 18 October 2016

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதி மன்றங்களின் உன்னதமான தீர்ப்பு 
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதி மன்றங்கள் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளது. நமது  ஊழியர்கள் காசாக்கும் (EL) விடுப்பை அதிகபட்சமாக 300நாட்கள் மட்டுமே வைத்துக்கொள்ளமுடியும் என்றும் 300நாட்களுக்கு மேல் தங்களின் கணக்கில் சேர்த்து வைத்துக்கொள்ள முடியாது எனவும் அப்படி இருந்தால் அந்த விடுப்புகள் தானே கழிந்து (LAPSE) விடும் எனவும் கூறி கழிக்கப்பட்டது ஆனால் அது தவறு எனவும் ஒரு ஊழியர் தனது காசாக்கும் விடுப்பை எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் (300நாட்களுக்கு மேல்) தங்கள் கணக்கில் சேர்த்து வைத்து கொள்ளலாம் எனவும் அவ்விடுப்புகள் தானே கழியாது எனவும் அவ்வூழியர் சட்டத்தில் உள்ளது போல் அதிகபட்சம் 300நாட்கள் விடுப்பை மட்டும் காசாக்கி  கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது ஆகவே  ஒவொரு வருடமும் நமது விடுப்பு தானே கழிந்து விடும் (LAPSE) என்றும்  கட்டாயம் நாம் அந்த விடுப்புகளை எடுக்கவேண்டும் என்கிற நிலையில் இருந்து மீண்டு நமது கணக்கில் வைத்துக்கொண்டு நமக்கு தேவை படும் போது அந்த விடுப்புகளை எடுத்துக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

Monday, 17 October 2016

தேவையில்லை துணை டவர் நிறுவனம்.
நஷ்டம் நஷ்டம் என்கின்ற கஷ்டம் மாறி நமது BSNL நிறுவனம் புது புது தனியார் நிறுவனங்கள் வந்து  மக்களை பலூனில் பறக்க விடுவது போல் விளம்பரம் செய்தாலும் நமது BSNL நிறுவனம் தான் மக்கள் நிறுவனம் என்று பறை சாற்றி மக்களின் ஆதரவோடும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கடும் உழைப்பாலும் நமது BSNL நிறுவனம் லாபகரமாக மாறிக்கொண்டுவரும் போது நமது நிறுவனத்தை  துணை டவர் நிறுவனம் என்று கூறி கூறுபோட நினைக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து 14/10/2016 அன்று கூடிய FORUM CORE COMMITTEEயின் கூட்டம் முதற்கட்ட போராட்டமாக 26/10/2016 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அரை கூவல் விடுத்துள்ளது. நாம் போராடி பெற்ற சலுகைகள் பலவற்றை தியாகம் செய்து காத்த நமது BSNL நிறுவனத்தை கூறுபோட்டு துணை டவர் நிறுவனம் அமைக்க ஒருபோதும் அனுமதியோம் என்று இந்த அரசிற்கு உணர்த்துவோம். 
"இன்குலாப் ஜிந்தாபாத்"
நீலகிரி மாவட்ட சங்கம்.

Saturday, 15 October 2016

இன்று நள்ளிரவு முதல் உயர்கிறது பெட்ரோல் 
டீசல் விலை 
சர்வதேச கச்சா விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அதன் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதாமாதம் மாற்றி அறிவித்து வருகின்றன. அதுபோல் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 34 காசுகள் உயர்ந்துள்ளது. இதுபோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 37 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை  உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தமிழக BSNL தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு

11 ஒப்பந்த தொழிலாளர்கள் பற்றிய பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லை இன்று ஆகவே தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன் பெரும்திறள்  முறையீட்டு போராட்டம் 25/10/2016 அன்று  நமது தமிழ் மாநில சங்கத்தின்  அழைப்பு புறப்படு தோழா சென்னை நோக்கி வங்க கடலே பொங்கி எழுந்து வந்தது போல்! 
போராடாமல் எதையும் நாம் பெற்றதாக சரித்திரமில்லை.
"இன்குலாப் ஜிந்தாபாத்"

Thursday, 13 October 2016

டெலிகாம் டெக்னீசியன் இலாக்கா தேர்வு 
டெலிகாம் டெக்னீசியன் (TM) பதவிகளுக்கு இலாக்கா தேர்வுகள்  நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கார்ப்ரேட் நிர்வாகம் அந்தந்த மாநில நிர்வாகங்கள் 31/03/2016 அன்று காலியாக உள்ள டெலிகாம் டெக்னீசியன் (TM) இடங்களை கணக்கிட்டு 31/10/2016க்குள் கார்ப்ரேட் அலுவலகத்திற்கு அனுப்பும் படிக்கு தனது 13/10/2016 தேர்த்தியிட்ட கடிதம் மூலம் கேட்டுள்ளது.

கடிதத்தின் நகலை காண...
14/10/2016 அன்று நடைபெறவிருந்த தர்ணா போராட்டம் நிர்வாகம் கொடுத்த உறுதிமொழியின் அடிப்படையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாநில சங்கத்தின் சுற்றறிக்கை காண...

Tuesday, 11 October 2016அனைத்து மக்களுக்கும் நீலகிரி மாவட்ட சங்கத்தின் இனிய 
மொஹரம் நல்வாழ்த்துக்கள் 


Monday, 10 October 2016

உழைக்கும் மக்கள் அனைவருக்கும் நீலகிரி மாவட்ட சங்கத்தின் இனிய தசரா நல்வாழ்த்துக்கள் 


Sunday, 9 October 2016

BSNL ப்ரிபெய்டு மொபைல்  சந்தாதாரர்களுக்கு தீபாவளி சிறப்பு சலுகை திட்டம்.

Saturday, 8 October 2016

விழாக்கால முன்பணமும் விழிபிதுங்கும் நமது ஊழியர்களும்.

நமது ஊழியர்கள் விழாக்களுக்கு பெற்றுவந்த விழாக்கால முன்பணம் நமது மாநிலத்தில்  ERP ESS முறை அமுல்படுத்தப்பட்ட உடன் முறைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டு குறிப்பிட்ட தேதியில் ஊழியர்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட தேதியில் பணம் பட்டு வாடா செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது அதன் அடிப்படையில் ஊழியர்கள் தசரா, மொஹரம் மற்றும் தீபாவளி ஆகிய மூன்று பண்டிகைகளுக்கும் 03/10/2016ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 06/10/2016ம் தேதிக்குள் பணம் பட்டுவாடா செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்  எனவும் CGM அலுவலக உத்தரவு இருந்தும் முறைப்படி 03/10/2016க்கு முன் விண்ணப்பித்த ஊழியர்களுக்கு இதுவரை பணப்பட்டுவாடா செய்யப்படவில்லை விழாக்கள் முடிந்தவுடன்தான் விழாக்கால முன்பணம் வருமா? 

குறிப்பிட்ட காலத்திற்குள் ஊழியர்கள் விண்ணப்பிக்காவிடில் CGM அலுவலக உத்தரவின்படி  மனுக்கள் பரிசீலிக்கப்படாது எனக்கூரி மனுக்களை தள்ளுபடிசெய்யும்  அதிகாரிகள் CGM அலுவலக உத்தரவின்படி குறிப்பிட்ட காலத்தில் (விழாக்கள் முடியும் முன்) ஊழியர்களுக்கு விழாக்கால முன் பணம் வழங்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நமது மாவட்ட சங்கம் வலியுறுத்துகிறது. 

Friday, 7 October 2016

வந்தது போனஸ் உத்தரவு 
நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியால் நமது தலைவர்கள் 2014-2015ம் ஆண்டிற்கான ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய  PLI நிர்வாகத்தால் மறுக்கப்பட்டாலோ, காலதாமதம் ஏற்படுத்தினாலோ போராட்டத்தை தவிர வேறு வழியில்லை என்று நமது CMD மற்றும் இயக்குனர் (HR) ஆகியோரை வற்புறுத்தியதின் விளைவாக  PLI பெறுவதிலிருந்த சிக்கல் இன்று 07/10/2016 மாலை நடைபெற்ற இயக்குனர் குழு கூட்டத்தின் ஒப்புதல் பெறப்பட்டு உத்தரவும் வெளியிடப்பட்டு விட்டது. இது நமது மத்திய சங்கத்திற்கும், நமது தலைவர்களின் அயராத உழைப்பிற்கும் நமது போராட்டகுணத்திற்கும் கிடைத்த வெற்றியே.

கிடைக்குமா போனஸ் 
தோழர்களே,
2014-2015ம் ஆண்டிற்கான போனஸ் நீண்ட போராட்டத்திற்குப்பின் ஊழியர்களுக்கு வழங்குவதாக நிர்வாகம் ஏற்றுக்கொண்டது ஆனால் அதில் காலதாமதம் பூஜைக்கு முன் போனஸ் கிடைக்குமா? கிடைக்காதா? ஊழியர்களின் எதிர்பார்ப்பு, 2014-2015ம் ஆண்டிற்கான போனஸ் ரூபாய் 3000/- ஊழியர்களுக்கு வழங்க DOTயின் கூடுதல் செயலாளர் மறுப்பு நமது சங்க தலைவர்கள் சென்று வற்புறுத்தியத்தின் விளைவாக மீண்டும் 10/10/2016 அன்று கூட்டம் கூடி விவாதிக்கும். நமது சங்க தலைவர்கள் BSNL CMD அவர்களையும்,இயக்குனர் (HR) அவர்களையும் சந்தித்தத்தின் அடிப்படையில் தாங்கள் தலையிட்டு விரைவாக போனஸ் பெற்றுத்தருவதாக உறுதி, நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய போனஸ் மறுக்கப்பட்டாலோ,காலம் தாழ்த்தப்பட்டாலோ வெடித்து கிளம்பும் போராட்டம். போராட்டங்கள் தான் நமக்கு அனைத்தும் பெற்றுத்தந்தது தேவைப்படின் தயாராவோம் போராட்டத்திற்கு.
                                                                     நீலகிரி மாவட்ட சங்கம்.