Monday 18 December 2017

13.12.2017 அன்று ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது. BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, BTEU, AIGETOA, SEWA BSNL, BSNL MS BSNL OA மற்றும் BSNL ATM ஆகிய சங்கங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் மிக பிரமாண்டமாக நடைபெற்றதற்கு அதில் முழு மனதுடன் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களை அந்தக் கூட்டம் தெரிவித்தது. இந்த வேலை நிறுத்தம் வெற்றிபெற உழைத்திட்ட அனைத்து மட்ட தலைவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது. மேலும் தலைவர்களை பேச்சு வார்த்தைக்கு கூட அழைக்காத BSNL நிர்வாகத்திற்கும், DOTஅதிகாரிகளுக்கும் இந்தக் கூட்டம் கண்டனத்தை தெரிவித்தது. இதில் பங்கேற்ற அனைத்து தலைவர்களும், போராட்டத்தை தீவிரப்படுத்த உறுதியான கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் முன் வைத்துள்ளனர். அடுத்த கட்ட போராட்ட திட்டத்தை வடித்தெடுக்க 08.01.2018 அன்று அடுத்த கூட்டத்தை கூட்டுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
01.01.2017 முதல் ஊதிய மாற்றத்தை அமலாக்க வேண்டும் மற்றும் BSNL நிறுவனத்தை அழிக்கும் துணை டவர் நிறுவனம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக நடைபெற்ற 2017 டிசம்பர் 12 மற்றும் 13 இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தமிழ் மாநில சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வெற்றிக்காக உழைத்திட்ட அனைத்து சங்கங்களின் அகில இந்திய, மாநில, மாவட்ட மற்றும் கிளை தலைவர்களையும் முன்னணி தோழர்களையும் மனதார வாழ்த்துகிறோம். நமது போராட்டம் முழு வெற்றி கிட்டும் வரை தொடரும். நமது போராட்ட வாளின் கூர் முனையை மேலும் தீட்டி வைப்போம். வாழ்த்துக்கள்.

Friday 15 December 2017

நடந்து முடிந்த இரெண்டு நாள்  வேலை  நிறுத்த போர்ராட்டம் நீலகிரி மாவட்டத்தில் 97.67 % தோழர்ககள்  கலந்தூக் கொண்டனர்  என்பதை
 மகிழ்ச்சியுடன் தெருவித்துக்கொள்கின்றோம்  
புரட்சிவாழ்த்துக்கள் .




                                                  நீலகிரி மாவட்டம்