Monday 8 May 2023

 BSNL ஊழியர் சங்கத்தின் போபால் மத்திய செயற்குழு, வெற்றிகரமாக நிறைவு பெற்றது.

போபாலில் நடைபெற்ற, BSNL ஊழியர் சங்கத்தின் இரண்டு நாள் மத்திய செயற்குழு, 07.05.2023 அன்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது. ஒட்டு மொத்தமாக 44 தோழர்கள் விவாதங்களில் பங்கேற்றனர். அதன் அடிப்படையில், முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஊதிய மாற்றத்தில் ஏற்பட்டுள்ள அதீத கால தாமதம், BSNLன் 4G மற்றும் 5G சேவைகளை துவக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் ஒவ்வொரு மாதமும், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், BSNLஐ விட்டு விலகுவது உள்ளிட்ட பிரச்சனைகளின் மீது தனது ஆழ்ந்த கவலையை, இந்தக் கூட்டம் பதிவு செய்தது. BSNL மற்றும் அதன் ஊழியர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க, JOINT FORUMத்தில் அக்கறையுடன் விவாதித்து, சக்திவாய்ந்த போராட்டங்களை நடத்த வேண்டும் என மத்திய தலைமையகத்திற்கு, இந்தக் கூட்டம் வழிகாட்டியது. மேலும், IDA நிலுவை தொகை பட்டுவாடா செய்யப்படுவதற்கு தேவையான, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த மத்திய செயற்குழு, மத்திய தலைமையகத்தைக் கேட்டுக் கொண்டது. கீழ்கண்ட பிரச்சனைகளின் மீதும், ஆழமான விவாதங்கள் நடைபெற்றன:-

1) அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்திற்கான நன்கொடையை, உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
2) உரிய கால கட்டத்தில் மாநில மாநாடுகள் நடைபெற வேண்டும்.
3) பணியிடங்களில், பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
4) அனைத்து மாநிலங்களிலும், BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும்.
5) மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில், BSNLEU, AIBDPA மற்றும் BSNLCCWF (TNTCWU) சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக்களின் செயல்பாட்டை வலுப்படுத்த வேண்டும்.
6) BSNL CCWFஐ புத்தாக்கம் செய்வது.
7) மத்திய சங்கத்தின் WHATSAPP செய்திகளை ஒவ்வொரு ஊழியர்களுக்கும் கொண்டு செல்வது.
8) அனைத்து உறுப்பினர்களின் மொபைல் தொலைபேசியிலும், TWITTER கணக்கு துவங்குவது.
9) BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தை காணொளி காட்சி மூலம் நடத்துவது.

No comments:

Post a Comment