BSNLEU NILGIRIS
மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் தொடர்ந்து மக்கள் விரோத கொள்கைகள் அமலாக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டில் வளர்ச்சிக்கு பதிலாக பல்வேறு முக்கிய துறைகள் வீழ்ச்சியையே சந்தித்து வருகின்றன. இந்நிலையில் பிரான்சை தலைமையிடலாக கொண்டும் 34 நாடுகளை உறுப்பு நாடுகளாக கொண்டும் இயங்கி வரும் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிகான அமைப்பு (ஒஇசிடி ) இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் இந்தியா தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருவதோடு, வேலையின்மையும் கணிசமாக அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 197 சதவீதம் வரையில் உயர்ந்தது. இதன் காரணமாக விலைவாசி உயர்ந்து மக்களிடம் இருந்த பணம் பறிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெறும் 1.09 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் நடப்பு ஆண்டில் 3.24 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் 31 சதவீத இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகின்றனர் என ஒஇசிடியின் பொருளாதார ஆய்வறிக்கை 2017 தெரிவிக்கிறது.
இளைஞர்கள் இந்தியாவில் 15-29 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களில் படிப்பறிவு மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்போரின் அளவு மட்டும் 30.83 சதவீதமாக இருக்கிறது. உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அப்படிப்பட்ட இளைஞர் சக்திக்கு எவ்வித வேலைவாய்ப்பு உத்தரவாத படுத்தாத திட்டங்கள்தான் பெருமளவில் இந்த காலத்தில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இளைஞர்களின் வேலையின்மை விகிதமும் அதிகரித்து வருகிறது. இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதி 15-29 வயது வரம்புக்குள் இருக்கும் பட்சத்தில் 30.83 சதவீதம் என்பது மிகவும் அதிகமானது. கிட்டதட்ட இந்தியாவில் 31 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் மீதான விலை உயர்வின் அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்களுக்கு வேலைவாய்ப்புப் பற்றாக்குறை செய்தி பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் புதிய இந்தியா பிறக்கிறது, நாட்டு மக்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும், நாட்டின் பொருளாதாரம் உயரும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தொடர்ந்து நம்பிக்கை வார்த்தைகளை மத்திய அரசு விசும் நிலையில், உண்மை தலைகீழாக இருக்கிறது எனப்து இந்த ஆய்வறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது சந்தையில் நிலவும் பணவீக்கம், வேலைவாய்ப்பு பற்றாக்குறையால் மக்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
மோடியின் அறிவிப்புகள் பிரதமர் மோடி நாட்டில் சுமார் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறினார், தற்போதைய நிலையைப் ஆய்வுக்க உட்படுத்துகையில் இருக்கும் வேலைகளும் பறிக்கப்படாமல் இருப்பதே பெரிய விஷயமாக மாறியிருக்கிறது.

பிற நாடுகள் 15-29 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களில் படிப்பறிவு மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்போரின் அளவு இந்தியாவில் 30.83 சதவீதம் இருக்கும் நிலையில், தென் ஆப்பிரிக்காவில் 36.65 சதவீதமாகவும், இந்தோனேசியாவில் 23.24 சதவீதமாகவும் உள்ளது. இதனைத் தொடர்ந்து கொலம்பியாவில் 20.62 சதவீதமாகவும், அர்ஜென்டீனாவில் 20.30 சதவீதமாக உள்ளது.
இந்தத் திடீர் உயர்வுக்கு உணவு பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசலின் விலை உயர்வு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. மொத்த பணவீக்கத்தில் மிகப்பெரிய பங்கு கொண்ட உணவு பொருட்களின் விலை உயர்வு சாமானியர்களைப் பாதித்தது மட்டுமல்லாமல் பணவீக்கத்தையும் உயர்த்தியது.

அதேபோல் ஆகஸ்ட் மாதத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் பணவீக்கம் 4.37 சதவீதத்தில் இருந்து 9.99 சதவீதமாக உயர்ந்து மொத்த விலை பணவீக்கத்தை 197 சதவீத உயர்விற்குக் கொண்டு சென்றது.
கச்சா எண்ணெய் புயல் காரணமாக அமெரிக்காவில் சுத்திகரிப்புப் பணிகள் முழுமையாக முடக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் பல இடங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 3 வருட உயர்வை அடைந்து, இதற்கு அடிப்படை காரணம் மத்திய அரசு பெட்ரோல் மீது விதிக்கும் கலால் வரியும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வருகிறது. 2017 துவக்கம் முதல் தற்போது வரை மத்திய அரசு டீசல் மீதான கலால் வரியை 12 முறை உயர்த்தியிருக்கிறது. இது 2016 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போது மட்டும் 54 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. இதற்கிடையில் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி 27 சதவகித்தில் இருந்து 34 சதவிகிதம் வரை விதித்து வசூலித்து வருகின்றன. இதன் காரணமாக பெட்ரேல் டீசலின் விலை பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு அனைத்து உணவு பொருட்களின் விலையையும் உயர்த்தியிருக்கிறது. இதன் காரணமாக ஒட்டு மொத்த மக்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment