Tuesday, 23 May 2023
Monday, 8 May 2023
BSNL ஊழியர் சங்கத்தின் போபால் மத்திய செயற்குழு, வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
ஊதிய மாற்றத்தில் ஏற்பட்டுள்ள அதீத கால தாமதம், BSNLன் 4G மற்றும் 5G சேவைகளை துவக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் ஒவ்வொரு மாதமும், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள், BSNLஐ விட்டு விலகுவது உள்ளிட்ட பிரச்சனைகளின் மீது தனது ஆழ்ந்த கவலையை, இந்தக் கூட்டம் பதிவு செய்தது. BSNL மற்றும் அதன் ஊழியர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க, JOINT FORUMத்தில் அக்கறையுடன் விவாதித்து, சக்திவாய்ந்த போராட்டங்களை நடத்த வேண்டும் என மத்திய தலைமையகத்திற்கு, இந்தக் கூட்டம் வழிகாட்டியது. மேலும், IDA நிலுவை தொகை பட்டுவாடா செய்யப்படுவதற்கு தேவையான, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இந்த மத்திய செயற்குழு, மத்திய தலைமையகத்தைக் கேட்டுக் கொண்டது. கீழ்கண்ட பிரச்சனைகளின் மீதும், ஆழமான விவாதங்கள் நடைபெற்றன:-
1) அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்திற்கான நன்கொடையை, உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
2) உரிய கால கட்டத்தில் மாநில மாநாடுகள் நடைபெற வேண்டும்.
3) பணியிடங்களில், பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
4) அனைத்து மாநிலங்களிலும், BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுக்களை உருவாக்க வேண்டும்.
5) மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில், BSNLEU, AIBDPA மற்றும் BSNLCCWF (TNTCWU) சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக்களின் செயல்பாட்டை வலுப்படுத்த வேண்டும்.
6) BSNL CCWFஐ புத்தாக்கம் செய்வது.
7) மத்திய சங்கத்தின் WHATSAPP செய்திகளை ஒவ்வொரு ஊழியர்களுக்கும் கொண்டு செல்வது.
8) அனைத்து உறுப்பினர்களின் மொபைல் தொலைபேசியிலும், TWITTER கணக்கு துவங்குவது.
9) BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தை காணொளி காட்சி மூலம் நடத்துவது.
போபால் மத்திய செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1) ஊதிய மாற்றம் தீர்வு காணப்பட வேண்டும்.
2) 4G மற்றும் 5G சேவைகளை BSNL துவக்க வேண்டும்.
3) MTNL மற்றும் BSNL இணைப்பு தொடர்பாக.
4) NFPE சம்மேளனம் மற்றும் AIPEU Group ‘C’சங்கம் ஆகியவற்றின் அங்கீகாரம் ரத்து செய்ததற்கு எதிராக.
5) மனித வள சீரமைப்பில் நிர்ணயிக்கப்பட்ட NORMSகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
6) பஞ்சாப் மாநிலத்தில், JTO இலாகா தேர்வு முடிவுகள் வெளியிடப்படாதது தொடர்பாக.
மாற்றலில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகையை மறுப்பதற்கு எதிராக, 11.05.2023 அன்று ஆர்ப்பட்டம் நடத்துவதற்கான அறிவிப்பை, BSNL ஊழியர் சங்கம், CMD BSNLக்கு வழங்கியது.மாற்றலில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகை மறுக்கப்படுவதற்கு எதிராக,
11.05.2023 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த, BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையம், ஏற்கனவே அறைகூவல் விடுத்திருந்தது. |