Tuesday, 28 June 2016


BSNLEU & TNTCWU உதகை கிளை மாநாடு

               25.06.2016 அன்று உதகை கிளையின் BSNLEU & TNTCWU இணைந்த கிளை மாநாடு தோழர்.R.சதாசிவம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இக்கிளை மாநாட்டில் தோழர்.V.முரளிகிருஷ்ணன், மாவட்டச்  செயலர் BSNLEU அவர்களும், தோழர்.நாகேஸ்வரன் LIC-யின் கோவை மண்டல செயலர் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.

   இம் மாநாட்டில் கீழ்கண்ட தோழர்கள் ஏக மனதாக  தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்...

    BSNLEU                                                                                                      

 தலைவர்         :தோழர்.S.அந்தோணிராஜ், TM

செயலர்           : தோழர்.R.பசுபதி, TM                    

பொருளாளர் : தோழர்.L.கிறிஸ்டோபர், TM 

TNTCWU 

தலைவர்         :தோழர்.சாதிக் க்ஷெரிஃப், TM

செயலர்           :தோழர்.பிரதிஷ்குமார், CL

பொருளாளர் :தோழர்.ஜான்சி

         தோழர்களின் பணிசிறக்க மாவட்டச் சங்கத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Saturday, 18 June 2016

05.07.2016 கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்படடம்

அன்பார்ந்த தோழர்களே,


                          ஊழியர் பிரசனைகள் மீது BSNL இயக்குனர் குழுவின் எதிர்மறை அணுகுமுறையை கண்டித்தது BSNL ஊழியர் சங்கமும், UNITED FORUM-த்தில் உள்ள சங்கங்களை கலந்தாலோசித்த பின் நாடு தழுவிய அளவில் 05.07.2016 அன்று கருப்பு அட்டையணிந்து ஆர்ப்பாட்டம் நடத்திட மத்திய சங்கத்தின்  அறைகூவலை ஏற்று நமது மாவட்டத்தில் SNATTA மற்றும் BSNLMS சங்கங்களோடு இணைந்து அனைத்து கிளைகளிலும்  இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்கிட வேண்டுமென மாவட்ட சங்கம் கேட்டுக்கொள்கிறது.


Thursday, 12 May 2016

7-வது சங்க தேர்தலில் BSNLEU அபார வெற்றி

     10.05.2016 ல் நடைபெற்ற சங்க அங்கிகார தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கை 199 இதில் பதிவான வாக்குகள் 194 அஞ்சல் வாக்கு 3 மொத்தம் 197 வாக்குகள் பதிவானது. 
12.05.2016ல் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு நீலகிரியில் வாக்கு நிலவரம் 


BSNLEU   =====> 155

NFTE       ===========> 039

FNTO    ============> 001

OTHERS ===========> 002


        தொடர்ந்து 7 வது முறையாக  78.68% வாக்குகள் பெற்று நீலகிரி மாவட்டத்தில் முதன்மை சங்கமாக வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. இந்த வெற்றி கனியை பறிக்க வாக்களித்த அனைவருக்கும் BSNLEU மாவட்ட / கிளைச் சங்கங்களின் புரட்சிகர வாழ்த்துகளையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.






Tuesday, 10 May 2016

புரட்சி வாழ்த்துக்கள்


                            இன்று காலை சரியாக 9 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள 5 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு துவங்கியது. பெரும்பான்மையான இடங்களில் நம் உறுப்பினர்கள் முதலில் வாக்களிக்க நம் சங்கம் வெற்றிப் பாதையில் பயணிக்கத் துவங்கியது.  முழுமையான வாக்குப் பதிவிற்கும் சங்கத்தின் மீது நம்பிக்கையோடு வாக்களித்த அனைத்து தோழர்களுக்கும்  BSNLEU மாவட்ட மற்றும் கிளைச் சங்கங்களின் புரட்சி வாழ்த்துக்கள் ....