Monday 14 November 2016

நாளை முதல் கடைகளை அடைக்க கேரளா வியாபாரிகள் முடிவு...
வர்த்தகம் பாதிக்கப்பட்டதால் கேரளாவில் நாளை முதல் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைக்க வியாபாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி  அறிவித்ததை தொடர்ந்து பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக நாடு முழுவதும் மக்கள் திண்டாடி வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளாவில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாததால் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

கடைகளிலும் மக்களுக்கு தேவையான சில்லரைகளை கொடுக்க முடியவில்லை. இதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டதால் கேரளாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைக்க வியாபாரிகள் முடிவு செய்து உள்ளனர்.

இதுகுறித்து கேரள வியாபாரிகள் சங்க தலைவர் ஒருவர் கூறுகையில்சில்லரை தட்டுப்பாட்டால் மாநிலம் முழுவதும் வர்த்தகம் கடுமையாக பாதிப்பட்டதால் கடைகளை அடைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அரசு தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவில்லைஎன்றார்.

மேலும், கணக்கில் வராத பணம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என கடைகளின் உரிமையாளர்களிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் மிரட்டல் விடுத்ததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்

No comments:

Post a Comment