Monday 14 November 2016

என் அதிரடி நடவடிக்கைகள் நான் விற்ற டீ போல 'ஸ்டிராங்'காதான் இருக்கும்: மோடி காரசாரம்

Image result for modi

நான் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் எல்லாம் என் இளமை காலத்தில் நான் விற்ற தேனீர் போல ஸ்டிராங்காதான் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் காஸிப்பூரில் இன்று நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றியதாவது, நான் சிறு வயதில் ரயில் நிலையத்தில் தேனீர் விற்பனை செய்த போது, ஏழை, எளிய மக்கள் என்னிடம் தேனீரை சற்று ஸ்டிராங்கா போட்டுக் கொடு என்பார்கள். இப்போது நான் எடுக்கும் நடவடிக்கைகளும் அதுபோலத்தான் இருக்கும் என்றார்.
மேலும், கருப்புப் பணம் பதுக்கப்பட்டதால் ஏழை மக்கள் பட்ட கஷ்டமும் எனக்குத் தெரியும், தற்போது பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் நீங்கள் படும் கஷ்டமும் எனக்குத் தெரியும்.

ரூ.2.50 லட்சம் அளவுக்கு டெபாசிட் செய்யும் பெண்களை வருமான வரித்துறை கேள்வி கேட்காது. ஆனால், 2.50 கோடி அளவுக்கு டெபாசிட் செய்தவர்களைத் தான் கேள்வி கேட்போம். உங்களைக் காப்பதற்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன். உங்கள் பணம் பாதுகாப்பாகத்தான் உள்ளது. ஏழைகள் நிம்மதியாக உறங்குகிறார்கள். கருப்புப் பணத்தை பதுக்கியவர்கள்தான் உறக்கம் இல்லாமல் இருக்கிறார்கள் என்று கூறினார்.
நமது பிரதமரின் ஸ்ட்ராங்கான அதிரடிகள் யாரை குறிவைத்து பதுக்கியவர்களையா? அல்லது ஏழை எளிய மக்களையா?ஏழைகள் நிம்மதியாக உறங்குகிறார்கள் என்றால் அது உறக்கமா அல்லது பசி மயக்கமா?சிந்திப்பாரா தேனீர் விற்றவர்... 

No comments:

Post a Comment